LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

எப்சிபா குரலின் விளக்கம் -பாவலர் வி பி மாணிக்கம்

"எப்சிபா குரலின் விளக்கம்".
பாவலர் வி பி மாணிக்கம் .கிரிஜா பதிப்பகம் .முதல் பதிப்பு 2012 .விலை ₹117 மொத்த பக்கங்கள் 276.
# இது ஒரு திருக்குறள் விளக்கப் புத்தகம்.
ஒவ்வொருவரும் தமது பெருமையை நிலைநாட்டிக் கொள்ள திறமையை நிலைநாட்டிக் கொள்ள திருக்குறள் மீது விளக்கம் எழுதுகின்ற வழக்கத்தில் வி பி மாணிக்கம் அவர்கள் இதை எழுதியிருக்கிறார். பரிமேலழகர் டாக்டர் மு வரதராஜன் வழி வந்தவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவர் வழி தனியாகத்தான் இருக்கிறது.
ஆசிரியரைப் பற்றி
வி.பி. மாணிக்கம்
எம்.ஏ.,ஆங்கில உயர் தட்டெழுத்து சுருக்கெழுத்து
மகள்...
செல்வி பியூலா பாக்கியராணி எம்.காம்., (எம்.பி.ஏ,பியட்) எம்.பில்., இயற்கை வைத்தியம்
ஏழாம் நாள் இறைவருகை மறைக் கல்விப் பட்டம், இளங்கலை சரித்திரம், முதுகலை இளமுனைவர் தமிழ் ஆய்வு, மானிடவியல் பட்டயப் படிப்பு, இயற்கை வைத்தியம்.
முதுகலை சமுகவியல்,
சரித்திரம், முதுகலை தமிழ் இலக்கியம்,
ரேடியோ, டி.வி பயிற்சி சான்று
வெளியீடு
நன்மை செய்யும் உண்மைகள், பாரதம் கண்ட பாரதி.
பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள்.
பரிசு.
புதுவை அரசால் கம்பன் புகழ்பரிசு, பாரத சமுதாயம் வாழ்கவே டும்.டும்.டும், வெளுத்ததெல்லாம் வெள்ளையா, சாதிக்க வேண்டும், தேசம் காக்கும் இலக்கியம், மானிடரின் கிறிஸ்துவ வாழ்க்கை, சிறுவர்களுக்கான பைபிள் கதைகள், நல்லதொரு குடும்பம் இந்தியா, வாழ்வு மகிழ்ந்தது, நினைவூட்டியச் சிந்தனை.
****
அறிவின் வளர்ச்சிக்கு வித்தாக நிற்கும் குறள்கள், விளக்கமாகவும், தெளிவுரையாகவும், நல்சுறுக்கமானக் கருத்தாயும் அமையப்பெற்றுள்ளன. இவற்றை சொந்த வாழ்க்கைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ள, அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூவினைப் பொருக்கி எடுப்பதுபோலவும், அவற்றை நூலான நாறில் தொடுத்தும் கோர்த்தும் மாலையாகவும் சரடாகவும் அமைத்துச் சோடித்து அழகாக எழுதப்பட்டிருக்கிறது.
 
திருவள்ளுவர் தமிழரின் முதல் மாதமாய்த் திகழும் தை மாதத்தில் உதித்தவர்.
அவர் நினைவாக நம் தமிழக அரசும் சிறப்பாக்கி செம்மொழித் தமிழ் என்ற உயர்நிலையை உருவாக்கிக்காட்டி நிற்பது, நம் மொழிப்பற்றினை எடுத்துக்காட்டியுள்ளது.
அவற்றினை மையமாகக் கொண்டு தமிழ்ப்பெருமக்கள் முக்கிய குறள்பாக்களுக்கு பொருள் அறிந்து கொண்டு திறன்கொண்டு செயல்பட, அறிவானவற்றாத நீரோடையை கண்டு பேரானந்தம் கொள்ளும்படி வழிக்காட்டி இருக்கிறார் ஆசிரியர்.
 
குறள், அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி
அருள் உடையவர்களுக்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளமான பேருலகில் வாழ்பவரே இதற்குச் சாட்சியாவார் என்கின்றது. எல்லாரும் கற்று, பேரறிவுகளையும் பெற்று, பெருவாழ்வு வாழ, தமிழரின் கலாச்சாரத்தைப் பேணிக்காத்திட, வேண்டும்.
 
பைபிளில், 'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்' என்பது போன்றும், குறள், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது போலும் நாம் அன்னப்பறவையைப் போன்று நன்மைகளை, நன்கு பருகிப் பயன்பெறுவோம்.
 
 
 
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
by Swathi   on 25 Oct 2023  0 Comments
Tags: Thirukkural   kural   valluvar    திருக்குறள்    திருவள்ளுவர்         
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது
Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.