தற்போது நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியான ஹன்சிகா, சுருதி ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
புலி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. தற்போது, விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேசி வருகிறார்களாம்.
அவர்களில் குறிப்பாக சோனாக்ஷி சின்ஹா அல்லது தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சோனாக்ஷி சின்ஹாவும், தீபிகா படுகோனேவும் ஏற்கெனவே ரஜினியின் நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|