62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி விருதுகள் விவரம் பின்வருமாறு.
சிறந்த தமிழ் திரைப்படம் :
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகர் :
'ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடல் ஆசிரியர் :
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த படத்தொகுப்பாளர் :
'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் :
சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பாடகி :
உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.
பிரைட் ஆஃப் தமிழ் சினிமா :
சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகர் :
கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார்.
சிறந்த நடிகை :
'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் :
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த படம் :
மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது
|