வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் அனேகன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருக்கிறார். மேலும், கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். என்டேர்டைன்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.
பாடல்களில் குறிப்பாக ‘டங்கா மாரி...’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. டீசரை பார்த்த அனைவரும் டிரைலர் எப்போது வெளியாகும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அனேகன் டிரைலர் வரும் ஜனவரி 7-ம்தேதி வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
|