என்னை அறிந்தால் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த படத்தில் நடித்த திரிஷாவுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெண் கதாபாத்திரங்களை மையாகக் வைத்து உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் திரிஷா ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.
இந்த படத்தில் திரிஷாவுடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். போகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.
இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த ‘ப்ரியம்’ படத்தை இயக்கியவர்.
எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கை தான் இந்த போகி டத்தின் ஒன் லை.
|